Tuesday, November 18, 2008
அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு
Saturday, November 15, 2008
தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்
Thursday, November 13, 2008
ஆசிரியராக இருந்தால்
சில நாட்களாக உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. நான் பணி புரியும் பள்ளியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள். கடந்த புதன்கிழமை தான் பரிசளிப்பு விழா நடந்தேறியது. சொல்ல முடியாத அளவிற்கு உடல் அசதி. என்ன செய்ய? தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தால் சகலமுமாக இருக்க வேண்டும். அது இது என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது.
பரிசளிப்பு விழாவிற்கு முன்பு முதல் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் ஒரு நாள் என்ற நிகழ்வு நடைப்பெற்றது. ஆறாம் ஆண்டு முடித்து முதல் படிவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ASP பாலன் மற்றும் Chief Insp மாதவன் ஆகியோர் நிறைய தகவல்களை மாணவர்களுடன் பறிமாறிக் கொண்டனர். அதிகாரிகள் சொன்ன அறிவுரைகளை காதில் போட்டுக் கொண்டு புத்திசாலித்தனமாக மாணவர்கள் நடந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதுதான். நல்லதயே நினைப்போம்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைப் போல இடைநிலைப்பள்ளிக்கு சென்ற பின்பும் கவனிப்பும் கண்டிப்பும் இருக்க வேண்டும். இடைநிலைப்பள்ளியில் நம்மின மாணவர்கள் போடும் ஆட்டத்தைப் பற்றிக் கூற வார்த்தை இல்லை. கைமீறிப் போனப் பின்பு அழுது ஒரு புண்ணியமும் இல்லை அல்லவா.....
Monday, November 3, 2008
யோசித்துப் பார்ப்போமா ? வாருங்கள்....
Thursday, October 30, 2008
படித்ததில் பிடித்தது - நீங்களும் படியுங்களேன்.....
2. நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும். தீமை விளையும் போது, அதற்கு காரணமானவரை பொறுப்பாக்குவது இயற்கை. ஆனால், நன்மையும் தீமையும் மற்றவரால் வருவதல்ல, அதற்கு அவர் ஒரு கருவி மட்டுமே உணரவும். ஏனெனில்,
3.மறப்போம், நன்மை செய்வோம். தனக்கு தீமை செய்தவரின் மேல் சினம் கொண்டால், அந்த சினத்தின் விளைவால், அடி மனது எப்போதும் கனன்று கொண்டே இருக்கும். ஆனால் அதை மறந்து, நன்மை செய்யும்போது, அதுவே நல்ல கர்மாவாக திரும்பும்.
4. விளைவுகளை யோசிக்கவும். இன்னொருவருக்கு துன்பம் விளைவித்தல் எளிது. அதன் விளைவு தனக்குத்தான் கர்மாவாக வந்து முடியும் என்ற அறிந்தவர், அதனாலாவது, மற்றவர்க்கு துன்பம் தராமல் இருப்பர்.
5. தீவினை வேண்டாம். இன்னொருவரின் துன்பமும், தம் துன்பம் என்று கருதினால், தீவினைகளை தவிர்க்கலாம்.
6. இறையருள் நாடவும். நீங்கள் தனிமரமாய் உங்கள் கர்மாவினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதில்ல. எல்லா வளமும் அருள காத்திருக்கிறான், எல்லாம் வல்லவன். அவன் அருளை நாடினால், ஏற்கனவே செய்த வல்வினைகளை தகர்த்திடும் மன உறுதியும், தூய செயல் ஆற்றலும் கிட்டும்.
7. ஏற்கனவே இருக்கும் கர்மாவை குறைக்க/தீர்க்க முயலவும். ஒருவர் அறவழிகளில் தொடர்ந்து நடந்து வந்தால், ஏற்கனவே செய்த தீவினைகளால் வரப்போகும் துன்பமும் குறைந்து விடும்.
8. அறவழியில் நடந்து நல்ல கர்மாவினை சேர்க்கவும். ஏனெனில்,
9. எந்த சமயத்திலும் யாரையும் இழிவு செய்ய வேண்டாம். ஏனெனில்,
10. அகத்தேடல் எனும் அருந்தவத்தில் ஈடுபடவும்.அகம் ஒளிரும் நிலை பெற்றிட, உள்ளார்ந்து, உள் மனதில் இறைவனின் பிம்பத்தினை தேடுவர். அவர் நற்சிந்தனையுடன் செயல்பட்டு தமது கர்மா முழுதும் தீர்த்திட, பிறவிப் பெருங்கடலை கடந்திட அருள் பெறுவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)
மொத்தத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.இதில் இறைவனின் பங்கென்ன என்று கேட்டால், இறைவனை வேண்டி நிற்பதனால், கர்மாவில் குறுகிட்டு அதை குறைப்பதிலோ, அல்லது தற்காலிகமாக தள்ளிப்போடவோ அவனால் இயலும். சரி, நல்ல கர்மாவையே ஒருவர் பெரிதும் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு இறைவனின் துணை தேவையில்லையா என்று கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு, இறைவன் இன்னொன்றாக இருக்காது. அவர் ஆன்மீகவாதியாக இருப்பாரென்றால் தான் நடக்கும் அவன் வழியே அற வழி என்பார். எங்கெங்கும் நிறைந்தவன் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பார் அவர். ஆன்மீகத் தேடலில் அடிஅடியாய் எடுத்து வைத்து, தம் ஆத்ம சக்தியினை வளர்த்துக் கொண்டவருக்கு, மொத்த கர்மாவும் எளிதில் தீர்ந்திடும். மறுபிறவி இல்லா நிலையும் வாய்க்கப் பெற்றிடும்.ஜோதிடமும் கர்மாவினால் இப்படி நாம் நடக்கலாம் என்பதை, கோள் மற்றும் நட்சத்திர அமைப்புகளின் உதவியுடன் கணித்துச் சொல்வதுதான். "கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும், ஈசன் அவன் அருள் இருக்கையிலே?".
Sunday, July 13, 2008
என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....
அன்பர்களே, நான் பதிவுலகிற்கு புதியவன். இப்பத்தான் என்னுடைய முதல் அடியை வைத்துள்ளேன். என்னை வாழ்த்தி உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....