Tuesday, November 18, 2008
அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு
Saturday, November 15, 2008
தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்
Thursday, November 13, 2008
ஆசிரியராக இருந்தால்
சில நாட்களாக உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. நான் பணி புரியும் பள்ளியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள். கடந்த புதன்கிழமை தான் பரிசளிப்பு விழா நடந்தேறியது. சொல்ல முடியாத அளவிற்கு உடல் அசதி. என்ன செய்ய? தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தால் சகலமுமாக இருக்க வேண்டும். அது இது என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது.
பரிசளிப்பு விழாவிற்கு முன்பு முதல் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் ஒரு நாள் என்ற நிகழ்வு நடைப்பெற்றது. ஆறாம் ஆண்டு முடித்து முதல் படிவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ASP பாலன் மற்றும் Chief Insp மாதவன் ஆகியோர் நிறைய தகவல்களை மாணவர்களுடன் பறிமாறிக் கொண்டனர். அதிகாரிகள் சொன்ன அறிவுரைகளை காதில் போட்டுக் கொண்டு புத்திசாலித்தனமாக மாணவர்கள் நடந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதுதான். நல்லதயே நினைப்போம்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைப் போல இடைநிலைப்பள்ளிக்கு சென்ற பின்பும் கவனிப்பும் கண்டிப்பும் இருக்க வேண்டும். இடைநிலைப்பள்ளியில் நம்மின மாணவர்கள் போடும் ஆட்டத்தைப் பற்றிக் கூற வார்த்தை இல்லை. கைமீறிப் போனப் பின்பு அழுது ஒரு புண்ணியமும் இல்லை அல்லவா.....