Thursday, October 28, 2010

அகண்ட அலைவரிசை

தற்பொழுது நமது நாடு தகவல் தொழிற்நுட்பத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பாமர மக்களையும் இணையம் சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அவா. ஆக இதனை கருத்தினில் கொண்டு நம்மவர்கள் அனைவரும் மிக-மிக விழிப்புடன் தற்பொழுது உள்ள வளர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். இன்னமும் இது சரியில்ல்....அது சரியில்ல என் சொல்லிக்கொண்டு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என நான் நினைக்கிறேன்.

நமது நாட்டில் இணைய தொடர்பை ஏற்படுத்தி தரக்கூடிய நிறுவனங்களின் பெயரும் அவர்களுடைய இணைய முகவரியையும் இணைத்துள்ளேன். தெரிந்துக் கொண்டவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

  • Celcom Broadband
http://www.celcom.com.my/broadband/index.php

  • Maxis Broadband
http://www.maxis.com.my/personal/broadband/index.asp

  • Digi Broadband
http://www.digi.com.my/internet/broadband/

  • P1 WimaX
http://www.p1.com.my/

  • Streamyx
http://www.streamyx.com.my/

Friday, July 24, 2009

உண்மையானதொரு உண்மை...படித்துப் பாருங்கள். சிந்தியுங்கள். மற்றவர்களுக்கும் கூறுங்கள்

KOTA BAHARU 24 Julai — Masyarakat India di Malaysia diminta lebih peka dan mengambil tahu mengenai setiap peluang yang disediakan kerajaan untuk membantu mereka, dan bukan hanya berpeluk tubuh dan menuduh mereka disisih kerajaan.
Timbalan Menteri Di Jabatan Perdana Menteri, Senator Datuk T. Murugiah berkata, amat tidak adil untuk menuduh mereka disisihkan kerajaan sedangkan pelbagai peluang dan bantuan sama rata termasuk dalam sektor ekonomi sudah disediakan.
“Kerajaan beri peluang sama rata kepada semua kaum tapi semua kena usahalah. Nak kata kerajaan bantu bumiputera saja, saya tengok di Manek Urai baru-baru ini ramai orang Melayu yang miskin,” katanya kepada pemberita selepas merasmikan Seminar Perniagaan Kecil, Agro Tani dan Francais di sini, hari ini.
Katanya, terbaru Perdana Menteri Datuk Seri Najib Tun Razak yang mengumumkan peruntukan RM15 juta untuk kaum India menerusi Tabung Ekonomi Kumpulan Usaha Niaga (TEKUN), menjadi bukti kaum itu tidak pernah dipinggirkan.
“Saya dimaklumkan sebanyak RM9 juta daripada jumlah itu sudah diagihkan kepada kaum India. Baki RM6 juta lagi akan diagihkan dalam masa terdekat.
Peruntukan ini akan membantu masyarakat India buat apa-apa perniagaan dalam usaha tingkatkan ekonomi mereka,” katanya.
மூலம் :

Wednesday, February 11, 2009

கந்தனுக்கு வேல் - வேல்.. முருகனுக்கு வேல்-வேல்...

Such disrespect for Thaipusam


I STRONGLY agree with the view of Jayaraj KGS to ban non-religious kavadis during Thaipusam.

First of all, we should really understand the meaning of the Thaipusam festival.

We often see Hindus carrying kavadis to fulfil their vows but what made me sad this year was to see the kavadis with EPL symbols.

Not only that, I have seen our youngsters smoking inside the temple. They are also irritating, rude and throw rubbish everywhere. There is no respect shown to Thaipusam. Why?

I hope the authorities will be forewarned and come out with strict rules to prevent a repetition of such behaviour.

UTHAYAKUMAR,

Kuala Lumpur.


சிந்தித்துப் பார்ப்போமா..

மூலம் : http://www.thestar.com.my/news/story.asp?file=/2009/2/12/focus/3251505&sec=focus

கற்போம். கற்பிப்போம். புரட்சி செய்வோம்.

ஜொகூர் பாரு நகரில் மிகப் பிரமாண்டமான முறையில் பொது நூல் நிலையம் ஆக அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் மொழிக்கென்று ஒரு பகுதியும் உண்டு.அங்கு நூற்றுக் கணக்கில் தமிழ் புத்தகங்கள் வைக்கப்படுள்ளது. ஆகவே நேரம் இருந்தால் சென்று வாருங்கள்.உங்களின் சுற்றாருக்கும் இதனைத் தெரிவியுங்கள்.



கற்போம். கற்பிப்போம். புரட்சி செய்வோம்.

Perbadanan Perpustakaan Awam Johor
Jalan Yahya Awal, Johor Bahru
07 - 227 9261

Tuesday, November 18, 2008

அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு

மீண்டும் சந்த்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கொஞ்சம் சூடாக பதிவு போட்டதாக பல அன்பர்கள் மின்மடல் அனுப்பிருந்தார்கள். அன்பர்களுக்கு நன்றி. உண்மை எப்போதுமே சூடாகவும் கசப்பாகவும் இருக்கும் தானே? இப்போது கூட வாயில் சீனி போட்டுக் கொண்டு தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் உண்மைகள் கசக்கும் அல்லவா?



நாம் அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு நம்மிடையே காணப்படும் பல குறைகளை நிவர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் இல்லாமல் போனால் அதற்கு அரசாங்கம் தான் காரணமா? அவரவர் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்ய வேண்டியது யார்? சுகதிற்காக பிள்ளைகளை பெற்றுக் கொண்டால் போதுமா? நாம் இப்பொழுது 2008-இல் இருக்கின்றோம். இன்னமும் போக்குவரத்து பிரச்சனையும், எழுத படிக்க தெரியாத பிரச்சனையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு முக்கியமாக தேவைப்படும் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் ஆகியவற்றை எடுத்து தராமல் இருக்கக் கூடாது. முயற்சி உடையார் இகழ்சி அடையார்.



அடுத்ததாக கல்வியைப் பற்றி பார்ப்போம். நம்முடைய சமுதாயதிற்கு சொத்தாக விளங்குவது கல்வி ஒன்றே. அது ஏட்டுக் கல்வியாக இருக்கட்டும் அல்லது தொழிற் கல்வியாக இருக்கட்டும். கல்வி ஒன்றே இன்றியமையாத சொத்து. ஆனால் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியின் பால் அக்கறை கொண்டுள்ளனர்? "பையன் ஏதோ படிக்கிறான்" என்று கூறுவோர் பலர். பள்ளிக்குச் சென்று ஆசிரியருடன் கலந்துரையாடி பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்காக பாடு படும் பெற்றோர் எத்தனைப் பேர்? எத்தனைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்? நூல் நிலையம் என்பது பொதுவானதொரு வசதி. அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். நமது பிள்ளைக்ளின் கல்வித் தரம் உயரமால் இருந்தால் யார் காரணம்? மீண்டும் அரசாங்கமா? அல்லது வழக்கம் போலவே சொல்லடி படும் தமிழ்ப்பள்ளி + ஆசிரியர்களா? அஸ்ட்ரோ இல்லாத வீட்டை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது போல ஆங்கிலம்/மலாய் நாளிதழ் வாங்கும் பெற்றோரையும் எண்ணி விடலாம். மறுபடியும் கூறுங்கள்; பிள்ளையின் கல்வி வளர்ச்சி யார் கையில் உள்ளது? 30% ஆசிரியர் + 30% பெற்றோர் + 40% மாணவர் = 100% வெற்றி. பெற்றோரின் அந்த 30% இருக்கிறதா?



அடிப்படையில் ஆட்டம் கண்ட மாணவன்/வி இடைநிலைப்பள்ளியில் என்ன செய்வான்/ள்? இளமைத் திருவிழா தான். பிறகு? கண்டதே காட்சி கொண்டதே கோலம். 17ல் படி தாண்டுதல் 20ல் 3பிள்ளைகளுக்கு தாய்/தந்தை.......உருப்படியான வேலையின்மையினால் கண்ட-கண்ட தொழிலில் ஈடுபடுதல்...................................................அப்பா சிறையில். அம்மா பிள்ளைகளுடன் வறுமையில். யார் காரணம்? மறுபடியும் அரசாங்கமா? வேறு வழி இல்லாமல் அம்மா மொத்த பிள்ளைகளுடன் தண்டவாளடத்தில் போய் உட்கார்ந்த கொடுமை அனைவருக்கும் நினைவு இருக்கிறது தானே?


இப்படி நிறைய குறைகள் நம்மிடையே உள்ளது. இவற்றையெல்லாம் நாமாகவே உணர்ந்து திருந்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும். அது போலவே நம்முடைய சிந்தனை மாறினால் தான் எல்லாமும் மாறும். எதற்காக கூறுகிறேன் என்றால் நமக்காக போராடி சிறையில் வாடும் நம் சகோதரர்கள் வெளியில் வந்து பார்க்கும் பொழுது மாற்றம் கண்ட சமுதாயத்தைப் பார்க்க வேண்டும். எதுவுமே உறுதியாக இல்லாத பட்சத்தில் எதைப் போராடி பெற வேண்டும் என்று நினைக்கிறீகள்?









Saturday, November 15, 2008

தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த பதிவில் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்ட அன்பு நண்பர் சதீசு அவர்களுக்கும், என்னுடைய ஹீரோ Cikgu சுலைமான் அவர்களுக்கும் நன்றி. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட யூ.பி.எஸ்.ஆர் முடிவில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் (நான் பணி புரியும் பள்ளி) சேர்ந்த 1 மாணவர் 7 - ஏக்களும் 2 மாணவிகள் 6- ஏக்களும் 4 மாணவிகள் 5-ஏக்களும் பெற்றனர். ஆசிரியர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி. ( நான் கணிதம் போதித்தேன்). இவ்வளவு தானா என்று ஒரு சிலர் கேட்கலாம். இருந்தாலும் இந்த முடிவுகளைப் பெறுவதற்கு நாங்கள் பட்ட பாடு என்ன என்பதனை பட்டவர்கள் புரிவார்கள். ஓருவர் தானா என்று கேட்க மாட்டார்கள். கேட்டாலும் பரவாயில்லை. எங்களின் முயற்சி வீண் போகவில்லை.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். இப்பொழுது சற்று பின்தங்கிய மாணவர்களைப் பார்ப்போம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் தான் இவர்களும் படித்தார்கள். ஆசிரியர்களும் ஒரே மாதிரியான கவனிப்பை தான் வழங்கினார்கள். அப்புறம் எப்படி பின்தங்க முடிந்தது? பதில் இல்லா கேள்வியிது. கல்வி அமைச்சு, மாநில கல்வி இலாக்கா, மாவட்ட கல்வி இலாக்கா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் மிக-மிக முக்கியமாக தலைமையாசிரியர்கள் குற்றம் சொல்வது ஆசிரியர்களை. .................. சரி - சரி ஆசிரியரும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் அனைவரும் மோசமான ஆசிரியர்கள் இல்லை.

பள்ளிக்கு பல மாத காலமாக வராமல் இருக்கும் மாணவர்களை என்ன செய்ய? இல்லை சம்மந்தப்பட்ட பெற்றோர்களை என்னவென்று சொல்ல? காரணம் கேட்டால் காரணம் ஆயிரம். ஆசிரியர் அடித்து விட்டால் மறுநாள் பள்ளியில் திருவிழா தான். அதிலும் ஒரு கேள்வி கேட்பார்கள் பாருங்களேன் " ஒங்க புள்ளையா இருந்தாக்கா அடிப்பீங்களா " இதற்கு என்ன பதில் கூற?

என்னுடைய சொந்த அனுபவம் இது. படியுங்கள்.

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஆரம்பிக்க இரண்டு நாட்கள் மிஞ்சி இருக்கும் வேளையில் ஆறாம் ஆண்டு மாணவர் பள்ளியில் வந்து இணைகிறார். அய்யோடா என்று அனைவரும் அலறினோம்...என்ன காரணம்? அம்மாணவர் மூன்று மாத காலமாக பள்ளிக்கே செல்லவில்லை. காரணம் என்ன்? Transport Problem என்ற ஆங்கில காரணம். என்னதான் செய்து விட முடியும்? ஏதோ வண்டி ஓடியது. வெளியில் என்ன பேச்சு வரும் தெரியுமா? "தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்".
இது ஒரு பகுதி தான். இன்னும் நிறைய.
இப்படி நிறைய குறைகளை நம்மிடையே வைத்துக் கொண்டு வேறு எங்கெங்கோ செல்கின்றோம். நாம் பெற்ற பிள்ளை முறையாக பள்ளிக்குச் செல்கின்றானா, ஒழுங்காக படிக்கின்றானா போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார்? பிறகு இடைநிலைப் பள்ளிக்குச் சென்றவுடன் மகன்/ள் நடத்தையை கவனிக்க வேண்டியது யார்? அவர்களின் நட்பு வட்டத்தை அறிய வேண்டியது யார்? இடைநிலைப்பள்ளியில் நிகழும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதிலும் நம்மின மாணவர்களின் அட்டகாசம் அட ராமா.... அட ராமா...... அட ராமா.....என்னவென்று சொல்ல? கேட்டால் வயது அப்படியாம். பிறகு திருந்தி விடுவார்களாம். எப்படி திருந்த? எப்பொழுது திருந்த? வயது கடந்த பின்பா? கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா? பலே-பலே. நம்முடைய அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் தான் எதையும் தட்டிக் கேட்க முடியும். எதுவும் உறுதியாக இல்லாத பட்சத்தில் எத்தனை
"25 நவம்பர்"கள் வந்தாளும்........

Thursday, November 13, 2008

ஆசிரியராக இருந்தால்


சில நாட்களாக உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. நான் பணி புரியும் பள்ளியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள். கடந்த புதன்கிழமை தான் பரிசளிப்பு விழா நடந்தேறியது. சொல்ல முடியாத அளவிற்கு உடல் அசதி. என்ன செய்ய? தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தால் சகலமுமாக இருக்க வேண்டும். அது இது என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது.

பரிசளிப்பு விழாவிற்கு முன்பு முதல் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் ஒரு நாள் என்ற நிகழ்வு நடைப்பெற்றது. ஆறாம் ஆண்டு முடித்து முதல் படிவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ASP பாலன் மற்றும் Chief Insp மாதவன் ஆகியோர் நிறைய தகவல்களை மாணவர்களுடன் பறிமாறிக் கொண்டனர். அதிகாரிகள் சொன்ன அறிவுரைகளை காதில் போட்டுக் கொண்டு புத்திசாலித்தனமாக மாணவர்கள் நடந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதுதான். நல்லதயே நினைப்போம்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைப் போல இடைநிலைப்பள்ளிக்கு சென்ற பின்பும் கவனிப்பும் கண்டிப்பும் இருக்க வேண்டும். இடைநிலைப்பள்ளியில் நம்மின மாணவர்கள் போடும் ஆட்டத்தைப் பற்றிக் கூற வார்த்தை இல்லை. கைமீறிப் போனப் பின்பு அழுது ஒரு புண்ணியமும் இல்லை அல்லவா.....