மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த பதிவில் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்ட அன்பு நண்பர் சதீசு அவர்களுக்கும், என்னுடைய ஹீரோ Cikgu சுலைமான் அவர்களுக்கும் நன்றி. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட யூ.பி.எஸ்.ஆர் முடிவில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் (நான் பணி புரியும் பள்ளி) சேர்ந்த 1 மாணவர் 7 - ஏக்களும் 2 மாணவிகள் 6- ஏக்களும் 4 மாணவிகள் 5-ஏக்களும் பெற்றனர். ஆசிரியர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி. ( நான் கணிதம் போதித்தேன்). இவ்வளவு தானா என்று ஒரு சிலர் கேட்கலாம். இருந்தாலும் இந்த முடிவுகளைப் பெறுவதற்கு நாங்கள் பட்ட பாடு என்ன என்பதனை பட்டவர்கள் புரிவார்கள். ஓருவர் தானா என்று கேட்க மாட்டார்கள். கேட்டாலும் பரவாயில்லை. எங்களின் முயற்சி வீண் போகவில்லை.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். இப்பொழுது சற்று பின்தங்கிய மாணவர்களைப் பார்ப்போம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் தான் இவர்களும் படித்தார்கள். ஆசிரியர்களும் ஒரே மாதிரியான கவனிப்பை தான் வழங்கினார்கள். அப்புறம் எப்படி பின்தங்க முடிந்தது? பதில் இல்லா கேள்வியிது. கல்வி அமைச்சு, மாநில கல்வி இலாக்கா, மாவட்ட கல்வி இலாக்கா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் மிக-மிக முக்கியமாக தலைமையாசிரியர்கள் குற்றம் சொல்வது ஆசிரியர்களை. .................. சரி - சரி ஆசிரியரும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் அனைவரும் மோசமான ஆசிரியர்கள் இல்லை.
பள்ளிக்கு பல மாத காலமாக வராமல் இருக்கும் மாணவர்களை என்ன செய்ய? இல்லை சம்மந்தப்பட்ட பெற்றோர்களை என்னவென்று சொல்ல? காரணம் கேட்டால் காரணம் ஆயிரம். ஆசிரியர் அடித்து விட்டால் மறுநாள் பள்ளியில் திருவிழா தான். அதிலும் ஒரு கேள்வி கேட்பார்கள் பாருங்களேன் " ஒங்க புள்ளையா இருந்தாக்கா அடிப்பீங்களா " இதற்கு என்ன பதில் கூற?
என்னுடைய சொந்த அனுபவம் இது. படியுங்கள்.
இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஆரம்பிக்க இரண்டு நாட்கள் மிஞ்சி இருக்கும் வேளையில் ஆறாம் ஆண்டு மாணவர் பள்ளியில் வந்து இணைகிறார். அய்யோடா என்று அனைவரும் அலறினோம்...என்ன காரணம்? அம்மாணவர் மூன்று மாத காலமாக பள்ளிக்கே செல்லவில்லை. காரணம் என்ன்? Transport Problem என்ற ஆங்கில காரணம். என்னதான் செய்து விட முடியும்? ஏதோ வண்டி ஓடியது. வெளியில் என்ன பேச்சு வரும் தெரியுமா? "தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்".
இது ஒரு பகுதி தான். இன்னும் நிறைய.
இப்படி நிறைய குறைகளை நம்மிடையே வைத்துக் கொண்டு வேறு எங்கெங்கோ செல்கின்றோம். நாம் பெற்ற பிள்ளை முறையாக பள்ளிக்குச் செல்கின்றானா, ஒழுங்காக படிக்கின்றானா போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார்? பிறகு இடைநிலைப் பள்ளிக்குச் சென்றவுடன் மகன்/ள் நடத்தையை கவனிக்க வேண்டியது யார்? அவர்களின் நட்பு வட்டத்தை அறிய வேண்டியது யார்? இடைநிலைப்பள்ளியில் நிகழும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதிலும் நம்மின மாணவர்களின் அட்டகாசம் அட ராமா.... அட ராமா...... அட ராமா.....என்னவென்று சொல்ல? கேட்டால் வயது அப்படியாம். பிறகு திருந்தி விடுவார்களாம். எப்படி திருந்த? எப்பொழுது திருந்த? வயது கடந்த பின்பா? கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா? பலே-பலே. நம்முடைய அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் தான் எதையும் தட்டிக் கேட்க முடியும். எதுவும் உறுதியாக இல்லாத பட்சத்தில் எத்தனை
"25 நவம்பர்"கள் வந்தாளும்........
7 comments:
ஓர் ஆசிரியர் படும்பாடு இன்னொரு ஆசிரியருக்குத்தான் புரியும். ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நீங்கள் பயிற்றுவிப்பது சவால் மிகுந்த ஒன்றுதான்.
நான் பயிற்றுப் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்த சமயம் என் வகுப்பில் பயின்ற பல மாணவர்களும் ரினிக்கு செல்வதற்கு பயந்தனர்.
எங்கள் விரிவுரையாளரும் எங்களிடம் பயம் காட்டினார். பிள்ளைகளை அடித்தால் கத்தி, அரிவாள் எல்லாம் வருமாமே.. :)
உண்மையா அன்பரே?
அன்பர் சதீசு அவர்களுக்கு நன்றி. நீங்கள் பயின்றது ஜொகூர் கல்லூரியிலா? எந்த ஆண்டு? கத்தி, வேல்கம்பு எல்லாம் இல்லை. பயப்பட வேண்டாம். இப்போது காலம் கொஞ்சம் மாறி விட்டது. படித்தவர்களின் பிள்ளைகளும் படிக்க வருகிறார்கள்.
என்னுடைய மறுமொழியில் தங்களின் வலையின் அறிமுகம் கிடைத்தது...வாழ்த்துகள்
Plz remove ur word verification..its juz a suggestion :-)
1. Go to your setting in dashboard
2. Select Comments
3. Click No @ Show word verification for comments?
மேலும் தகவல் பெற விரும்பினால் :- punitha.mu@gmail.com
உதவ காத்திருக்கிறேன்!!!
//இப்பொழுது சற்று பின்தங்கிய மாணவர்களைப் பார்ப்போம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் தான் இவர்களும் படித்தார்கள். ஆசிரியர்களும் ஒரே மாதிரியான கவனிப்பை தான் வழங்கினார்கள். அப்புறம் எப்படி பின்தங்க முடிந்தது?//
என் கருத்து.
இதற்கு காரணங்கள் பல.. அது முதலில் ஆசியர்களுக்கு புரிய வேண்டும். நான் ஆசிரியர்களை குறை கூறவில்லை. எல்லோருமே குழந்தைகளின் மனோதத்துவம் கற்ற பின்னரே ஆசிரியர்களாகின்றனர் அல்லவா?
முதல் காரணம். 7 ஏக்கள் வாங்கிய மாணவர் எப்போது முன் இருக்கையிலேயே அமர்ந்திருப்பார். இதற்கு ஓரிரண்டு பேர் விதிவிலக்காகலாம். ஆக, முதல் இருக்கையில் பின் தங்கிய மாணவர்களை அமரச் செய்யலாம். அல்லது வாரத்திற்கு ஒருவராக மாற்றி அமரச் செய்யலாம்.
பகவத் கீதையில், கிருஷ்ண பகவான் 'தத் துவ மசி' என்கிறார். ஒரு தலைமை ஆசிரியர், தமிழ் பள்ளி நல்ல பள்ளி என்று நம்பினால்தான் அந்த பள்ளியை முன்னேற்ற முடியும். இங்கே பல தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அந்த நம்பிக்கையே இல்லையே.. இருந்தால், தங்கள் பிள்ளைகளை மட்டும் மலாய்ப்பள்ளியிலும் சீனப் பள்ளியிலும் சேர்ப்பார்களா?
எனது அடுத்த கவிதை இதைப் பற்றி இருக்கும். குறை கூறுவதாக எண்ணாமல், வாதமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சமுதாயத்தை அலசுவதால்தான் இத்தனை காட்டம். வணக்கம்!
ஊக்கு விற்ப்பவனை ஊக்குவித்தல் அவனே தேக்கு மரம் விற்பான்
( யாரோ சொன்னது ).:)
Post a Comment