மீண்டும் சந்த்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கொஞ்சம் சூடாக பதிவு போட்டதாக பல அன்பர்கள் மின்மடல் அனுப்பிருந்தார்கள். அன்பர்களுக்கு நன்றி. உண்மை எப்போதுமே சூடாகவும் கசப்பாகவும் இருக்கும் தானே? இப்போது கூட வாயில் சீனி போட்டுக் கொண்டு தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் உண்மைகள் கசக்கும் அல்லவா?
நாம் அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு நம்மிடையே காணப்படும் பல குறைகளை நிவர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் இல்லாமல் போனால் அதற்கு அரசாங்கம் தான் காரணமா? அவரவர் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்ய வேண்டியது யார்? சுகதிற்காக பிள்ளைகளை பெற்றுக் கொண்டால் போதுமா? நாம் இப்பொழுது 2008-இல் இருக்கின்றோம். இன்னமும் போக்குவரத்து பிரச்சனையும், எழுத படிக்க தெரியாத பிரச்சனையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு முக்கியமாக தேவைப்படும் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் ஆகியவற்றை எடுத்து தராமல் இருக்கக் கூடாது. முயற்சி உடையார் இகழ்சி அடையார்.
அடுத்ததாக கல்வியைப் பற்றி பார்ப்போம். நம்முடைய சமுதாயதிற்கு சொத்தாக விளங்குவது கல்வி ஒன்றே. அது ஏட்டுக் கல்வியாக இருக்கட்டும் அல்லது தொழிற் கல்வியாக இருக்கட்டும். கல்வி ஒன்றே இன்றியமையாத சொத்து. ஆனால் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியின் பால் அக்கறை கொண்டுள்ளனர்? "பையன் ஏதோ படிக்கிறான்" என்று கூறுவோர் பலர். பள்ளிக்குச் சென்று ஆசிரியருடன் கலந்துரையாடி பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்காக பாடு படும் பெற்றோர் எத்தனைப் பேர்? எத்தனைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்? நூல் நிலையம் என்பது பொதுவானதொரு வசதி. அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். நமது பிள்ளைக்ளின் கல்வித் தரம் உயரமால் இருந்தால் யார் காரணம்? மீண்டும் அரசாங்கமா? அல்லது வழக்கம் போலவே சொல்லடி படும் தமிழ்ப்பள்ளி + ஆசிரியர்களா? அஸ்ட்ரோ இல்லாத வீட்டை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது போல ஆங்கிலம்/மலாய் நாளிதழ் வாங்கும் பெற்றோரையும் எண்ணி விடலாம். மறுபடியும் கூறுங்கள்; பிள்ளையின் கல்வி வளர்ச்சி யார் கையில் உள்ளது? 30% ஆசிரியர் + 30% பெற்றோர் + 40% மாணவர் = 100% வெற்றி. பெற்றோரின் அந்த 30% இருக்கிறதா?
அடிப்படையில் ஆட்டம் கண்ட மாணவன்/வி இடைநிலைப்பள்ளியில் என்ன செய்வான்/ள்? இளமைத் திருவிழா தான். பிறகு? கண்டதே காட்சி கொண்டதே கோலம். 17ல் படி தாண்டுதல் 20ல் 3பிள்ளைகளுக்கு தாய்/தந்தை.......உருப்படியான வேலையின்மையினால் கண்ட-கண்ட தொழிலில் ஈடுபடுதல்...................................................அப்பா சிறையில். அம்மா பிள்ளைகளுடன் வறுமையில். யார் காரணம்? மறுபடியும் அரசாங்கமா? வேறு வழி இல்லாமல் அம்மா மொத்த பிள்ளைகளுடன் தண்டவாளடத்தில் போய் உட்கார்ந்த கொடுமை அனைவருக்கும் நினைவு இருக்கிறது தானே?
இப்படி நிறைய குறைகள் நம்மிடையே உள்ளது. இவற்றையெல்லாம் நாமாகவே உணர்ந்து திருந்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும். அது போலவே நம்முடைய சிந்தனை மாறினால் தான் எல்லாமும் மாறும். எதற்காக கூறுகிறேன் என்றால் நமக்காக போராடி சிறையில் வாடும் நம் சகோதரர்கள் வெளியில் வந்து பார்க்கும் பொழுது மாற்றம் கண்ட சமுதாயத்தைப் பார்க்க வேண்டும். எதுவுமே உறுதியாக இல்லாத பட்சத்தில் எதைப் போராடி பெற வேண்டும் என்று நினைக்கிறீகள்?
10 comments:
சமுதாய சீர்திருத்தம் உள்ளிருந்து வர வேண்டும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அச்சீர்திருத்தங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் பங்கப்படுத்தப்படுவதை நிறுத்துவதுதான் நம் போராட்டம்..
முறையான ஏழ்மைத் துடைத்தொழிப்புத் திட்டம், தமிழ்ப் பள்ளிகளை முழு உதவிப் பெற்றப் பள்ளிகளாக மாற்றுவது, சிறு தொழில் பெரு வணிக வாய்ப்புகள், அரசாங்க வேலைகளிலும் கல்விசார் நிலையங்களிலும் சம வாய்ப்பு என இன்னும் பல உரிமைகளை இழந்து நிற்கும் சமுதாயமாக நாம் இருக்கிறோம். அதனால்தான் நம்மைக் குட்டக் குட்டக் குனிந்துபோன சமுதாயமாக நாம் உருபெற்றுவிட்டோம்.
இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதுதான் நம் முக்கியமான போராட்டம். சமுதாய சீர்த்திருத்தங்கள் என்பது தனிநபர், குடும்பம், சமுதாய அமைப்புகள், அரசியல் சூழ்நிலைகள் போன்றவையே தீர்மானிக்கும் காரண காரணிகளாக விளங்குகின்றன.
சிந்தனை மாற்றமும் உரிமைப் போராட்டமும் ஒருங்கே நாம் முன்னெடுக்க வேண்டிய ஒரு கடமையாகும். ஒன்றை மட்டும் செயல்படுத்த முனைந்தால் இழப்பு நமக்குத்தான்!
Banyak perkara perlu dikaji kerana kita hidup dalam zaman menuju mengejar kemajuan. Janganlah ibu bapa gadaikan ilmu dan masa depan anak untuk mengejar cita-cita mereka. Usah sampai nasi menjadi bubur.Anak adalah harta paling berharga. Cikgu Thiru cetusan yang baik.Syabas !Teruskan menulis...
<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">
*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்
*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்
*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்
மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.
இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்
குறை கூறுவது நியாயம்......
நிவர்த்தியைப் பற்றி பேசினால் மேலும் சிறப்பாக இருக்கும்...
பயனுள்ளதாகவும் இருக்கும்....
//இப்போது கூட வாயில் சீனி போட்டுக் கொண்டு தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்//
:-)))
//இப்போது கூட வாயில் சீனி போட்டுக் கொண்டு தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.//
இந்தச் சூட்டிலும் உங்களுக்கு ஆசியம் செய்ய தோணுதெ.. பலே
பொங்கல் வாழ்த்துக்கள்....
மகாகவி பாரதியார் கூட அரவிந்தரிடம் வாதம் செய்வார்... சமுதாய சீர்திருத்தம் உள்ளிருந்து தொடங்க வேண்டும் என்று... பாரதி படத்திலும் அதை பதிவு செய்திருப்பார்கள்.... பாழாய் போன இந்த அரசியல் கட்சி,தலைவர்கள்,அரசாங்கம் இவைகளை நம்பி பயன் இல்லை... நம் வீட்டை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும்... காலம் தாழ்தல் கூடாது.
மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!
தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.
தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.
http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!
இனிய அன்பரே வணக்கம்.
மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா
இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com
தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்
ஒப்புக்கொள்கிறேன்.. வெறும் சுகத்துக்காக பிள்ளைகளை பெற்றுக்கொண்டு.. அவர்களுக்கு பிறப்புப் பத்திரம் கூட எடுக்காமல் விடுவது.. பெற்றோரின் தவறுதான்.
ஆனால்.. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நம்மவர்கள் ஆனதற்கு என்ன காரணம் என்று சற்று யோசிப்போமா? அன்று தோட்டத் துண்டாடல் என்று கேள்விப் பட்டதுமே, துன் சம்பந்தன்.. வீதி வீதியாய் சென்று, பத்து ரிங்கிட் திரட்டி பல தோட்டங்களைச் சொந்தமாக வாங்கினார்... அதை யாராலும் மறுக்க முடியுமா? சமுதாயத்துக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது, அதற்கான வழிகளையும் தீர்வுகளையும் காண்பவர்தான் சமூகத் தலைவராக இருக்க முடியும்! அதை விட்டு விட்டு, சமூகத்தில் என்ன நடக்கிறதென்பதை எல்லாம் கவலைப் படாமல், அடிதடி அரசியல் நடத்தி, ஆஸ்திரேலியாவில் சொத்துக்களையும் ஸ்விஸ் வங்கியில் பணத்தையும் போட்டு வைப்பதிலேயே நம் தலைவர்கள் குறியாக இருப்பதுதான்.. அடிப்படை காரணம். அதிலும், படிப்பு வரவில்லையா, ம.இ.காவில் சேர்ந்து ஆடியாள் ஆகிவிட்டால் போதும் என்று இப்போது ஆகிவிட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்?
ம.இ.காவின் தலைமைத்துவத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. அவர்களின் கல்வித் தகுதி என்னவென்று அவர்களின் தலைவருக்கும் தெரியும்.. அதுதான் அவரது விருப்பமும் கூட. தன்னை மிஞ்சி ஒருவனை உள்ளே விட்டால், தன் சீட்டு காலியாகிவிடுமல்லவா?! ஒரு காலத்தில், இந்நாட்டில், சீனர்கள்தான் குண்டர்களாக இருந்தனர். kongsi gelap என்று அவர்களின் இருப்பிடங்களைத்தான் கூறூவார்கள். இன்று நிலைமை எப்படி இருக்கிறதென்று சற்று சிந்திப்போமா?
அடுத்து உங்கள் குற்றச்சாட்டு, 30% பெற்றோரின் பங்கு, இங்கே நம்மவர்களிடம் இல்லை என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது.. நன்றாக படித்தாலும், இங்கே முதலில் வாய்ப்புக்கள் நிராகரிக்கப் படுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.. படிப்பில் மட்டுமல்ல.. இன்றைய தேதியில், எந்த இந்தியனும் விளையாட்டுத்துறையில் கூட ஈடுபட மறுக்கின்றனர். காரணம்... அங்கீகாரம்! மறுக்க முடியுமா?
இன்னமும், எந்த தொழிலை பெரிதாக செய்தாலும், அது பூமிபுத்ராக்களுடன் சேர்ந்து மட்டுமே செய்ய வேண்டுமாம்! என்னய்யா சட்டம் இது? பாவம், நம்மவர்கள் அதிகம் ஈடுபடும் லாரி தொழிலும், இரும்பு வியாபாரத்துக்குக் கூட அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது..
அரசாங்கத்தை ஏன் குறை கூற வேண்டுமா? காரணம்.. சரியான அரசியல் சாசனம் இன்னும் அமைக்கப்படாததால்தான்! அரசியல்தான் ஒரு நாட்டின் ஆதாரம். அது சரியில்லை என்றால், மக்கள் நிலைமை சேதாரம்!
புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்..
Post a Comment